Friday, March 2, 2012

அண்ணலாரின் அழகிய முன் மாதிரி!

அண்ணலாரின் அழகிய முன் மாதிரி!
அல்லாஹ் இவ்வுலகில் ஒவ்வொரு சமுதாயத்திற்க்கும் அந்தந்தச் சமுதாய மக்களுக்கும் அல்லாஹ்வின் கட்டளைகளை போதனைகளை எடுத்துரைத்து நேர்வழி காட்டக் கூடிய ஒருவர் உண்டு என்பதாகக் கூறுகிறான். (அல்குர் ஆன் 13:7)
குர் ஆனில் மற்றோர் இடத்தில் நபியே நம் வசனங்களை ஓதி காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலை நகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை. மேலும் எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக்காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை. (அல்குர் ஆன் 28:59)
அல்லாஹ் இந்த வசனத்தில் எந்த ஊரையும் அந்த ஊருக்கு ஒரு ரசூலை அனுப்பாமல் அழிப்பதில்லை என்று கூறுகின்றான். அப்படிப்பட்ட ரசூல்மார்களின் வரிசையில் வந்த இறுதி நபி தான் நம்முடைய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள். நபிகள் (ஸல்) அவர்களுக்கு மற்ற எல்லா நபி மார்களை விட அதிகச் சிறப்புக்கள் உண்டு. அதாவது ஒவ்வொரு நபியும் ஒவ்வொரு சமூகத்திற்க்கு மட்டும் நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், முஹம்மது (ஸல்) அவர்கள் உலகம் முழுவதிற்க்கும், எல்லாச் சமூகத்தவருக்கும் பொதுவாக நபியாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதைத்தான் அல்லாஹ் தன் திருமறையில், நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹமத்தாக அருட்கொடையாக வேயன்றி அனுப்பவில்லை. (அல் குர் ஆன் 21:107)
நாம் அத்தூதர்களில் சிலரை, சிலரைவிடச் சிறப்பாக்கி வைத்துள்ளோம் என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான். (அல்குர் ஆன் 2:253)
மேலும், ரசூல் (ஸல்) அவர்களின் காலத்திற்க்கு முன்பு ஒவ்வொரு சமூகத்தவர்களும், அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் வணங்க முடியும். ஆனால், நம்முடைய நபி ரசூல் (ஸல்) அவர்களின் சமூகத்தவர்கள் பூமியில் சுத்தமான எந்த இடத்திலும் அல்லாஹ்வை வணங்கலாம். அதுமட்டுமல்ல, பூமியில் சுத்தமான மண்ணைக் கொண்டு உடலையும் சுத்தப் படுத்தலாம். மேலும், நபி ஈஸா (அலை) அவர்கள், தனக்குப் பின்னால் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வருவார்கள் என்றும் தான் கூறாத மீதமுள்ள விஷயங்களை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்றும் சொன்னார்கள். அல்லாஹ் குர் ஆனில் பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்பிக்கும் ரஸுல் (இறைத்தூதர்) வருவார். நீங்கள் அவர் மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக! எனக் கூறினான்.(அல்குர் ஆன் 2:81)
ஆக ரசூல் (ஸல்) அவர்களின் மார்க்கத்தில் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு உள்ளது.
ஒரு தடவை அல்லமா இக்பால் (ரஹ்) அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்த பொழுது அங்கு டாக்டர் படிப்பு படித்த கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஒரு பெண் அவர்களைச் சில விஷயங்களைக் குறித்து உரையாடினார். பிறகு, அந்தப் பெண் இக்பால் (ரஹ்) அவர்களிடம் , "நான் தங்களுக்கு மனைவியாக இருக்க விரும்புகிறேன் அப்படி தாங்கள் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் ஒரு நிபந்தனை. அதாவது, தாங்கள் என்னுடைய மதத்திற்க்கு மாறி விட வேண்டும்" என்று கூறினாள். அதற்கு அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் மிக அழகாகப் பதில் சொன்னார்கள். "நீ சொல்கின்றபடி நான் உங்கள் மார்க்கத்திற்க்கு வந்தால் உங்கள் தலைவர் நபி ஈஸா அலை அவர்களை சட்டப்படி நான் பின்பற்ற வேண்டும். ஆனால் உங்கள் தலைவர் நபி ஈஸா அலை அவர்களோ எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லையே; அவ்வாறிருக்க நான் எப்படி உங்கள் மார்க்கத்திற்க்கு வந்து உங்களை நிக்காஹ் செய்து கொள்ள முடியும்? எங்கள் மார்க்கத்தில் எங்கள் தலைவர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கன்னிப்பெண்ணையும் , விதவைப் பெண்ணையும் திருமணம் செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல , எங்கள் மார்க்கத்தில் ஒரே சமயத்தில் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்வதற்க்கு அனுமதி உண்டு.
ஆகையால் நீ என் மார்க்கத்திற்க்கு வந்தால் உன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறேன்" என்று பதில் சொன்னர்கள். மேலும் ரசூல் (ஸல்) அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்களின் சமூகத்தவர்கள் அந்த நபிமார்களைக் கொண்டு ஈமான் கொள்ளாமல் அவர்களுக்கு அதிகம் தொல்லைகளும் கஷ்டங்களும் கொடுத்த சமயத்தில் அந்த நபிமார்கள் தங்களுடைய சமூகத்தவர்களைச் சபித்தார்கள் , வேதனை வாங்கிக் கொடுத்தார்கள். நபி நூஹ் அலை 950 வருடம் வாழ்ந்து ஏகத்துவக்கொள்கையைப் பரப்பினார்கள். ஆனால் 80 பேர்கள் தான் அவர்களைக் கொண்டு ஈமான் கொண்டார்கள். கடைசியாக நூஹ் அலை அவர்க்ள் தங்களுடைய சமூகத்தவர்களுக்குப் பாதகமாக து ஆ செய்தார்கள் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
நூஹ் அலை அவர்கள் கூறினார்கள் : என் இறைவா பூமியின் மீது இந்த காபிர்களில் எவரும் இங்கு வசிக்கும்படி விட்டு வைக்காதே. அல்குர் ஆன் 71:26
அடுத்து மூஸா அலை அவர்களும் தங்ளுடைய சமூகத்தவர்களுக்குப் பாதகமாக துஆ செய்ததையும் அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.
"எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்ளை அழித்து அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காத வரையில் அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்" என்று மூஸா அவர்கள் கூறினார்கள். அல்குர் ஆன் 10:88
ஆகவே , இவ்வாறு பல நபிமார்கள் தங்களுடைய சமூகத்தவர்களுக்குப் பாதகமாக துஆ செய்திருக்கிறார்கள். ஆனால் , நபி நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தைப் பரப்பிய சமயத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத காபிர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்குச் சொல்லாலும் செயலாலும் அதிகம் தொல்லைகளும் கஷ்டங்களும் கொடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்திலும் நாயகம் (ஸல்) அவர்கள் காபிர்களுக்கு எதிராக துஆ செய்ததில்லை.
குறைஷி இணை வைப்பாளர்களின் தலைவன் அபூ ஜஹ்ல்
இறைவா! இந்தக் குர் ஆன் உன்னிடத்திலிருந்து வந்தது உண்மையாக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழி அல்லது
துன்புறுத்தும் ஒரு வெதணையை கொண்டு வா! என்று சொன்னான். அப்போது "நபியே நீ அவர்களுக்கிடையே கிருக்கும் போது அல்லாஹ் அவர்கள் மீது வெதனையை இறக்குபவன் அல்லன். மேலும் , மக்கள் பாவ மன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அல்குர் ஆன் 8:32,33
என்று அல்லாஹ் கூறினான்.
நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் உலக மக்கள் அணைவருக்கும் வழி காட்டும் கலங்கறை விளக்குகளைப் போன்று அழகிய முன் மாதிரியாக அமைந்திருந்தது. என்வே தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அன்பை பெற்ற அருந்தூதராகவும் மனித குலம் பின்பற்றி நடக்கத்தக்க ஒப்பற்றத் தலைவராகவும் திகழ்ந்தார்கள்.

Wednesday, September 28, 2011

Saturday, September 5, 2009

Photos on New Born

இது எண்ணுடைய இரண்டு மாத போட்டோக்கள்.











































































































































Hiii

Assalamu Alaikum,

Welcome to all my blog.........